Wednesday, November 12, 2008

" கடன் "

பிள்ளைகள் எல்லோரும் நலம் தானே...

பாட்டியும் நல்ல சுகம். சென்ற முறை உங்களுக்கு " மனஅழுத்தம்" பற்றி அழுத்தி அழுத்தி சொன்னனான் தானே. இந்த முறை " கடன் " பற்றி எடுத்துவிடலாம் என்று இருக்கிறேன்.

அப்பப்பா பொல்லாத சொல்லப்பா இது. வேண்டியவனும் நின்மதியாய் இருந்ததில்லை, கொடுத்தவனும் நின்மதியாய் இருந்ததில்லை. அப்ப என்னதான் செய்யலாம், வேண்டாமல் விடுவதா??? அல்லது கடன் கேட்டாலும், உயிர் போனாலும் கொடுக்காமலே விடுவதா..???

இல்ல அப்படியான எண்ணம் யாருக்கும் வரக்கூடாது. மற்றவர்களின் அவசரதேவைக்கு எங்களிடம் இருப்பதை கடனாக கொடுப்பதால் அதை பெற்றுக் கொண்டவன்மட்டுமன்றி அதனால பிரையோசனப்பட்டவர்களும் உங்களை, எங்களை வாழ்த்துவார்கள். ஆனால் யாரை நம்புவது பணத்தை
வேண்டிக்கொண்டு எஸ்கேப்பானால் என்ன செய்வது..? என்று நாங்கள் யோசிக்கதான் வேண்டும்.


இதுவரையில் யாருக்காச்சும் கேட்டவரம் அத்தனையும் தெய்வம் கொடுத்திருக்கா..? இல்லைத்தானே..அதுபோலத்தான் இதுவும் நாம நம்பிக்கை வைக்கிறோம் கொடுக்கிறோம். அந்தக் கடன் திரும்ப நமக்கு கிடைத்தால் கண்டு கொள்ளவேண்டியதுதான். அப்படி கிடைக்காவிட்டால்....நன்னா அவங்களை சபிச்சுட்டு இருக்கவேண்டியது தான்.

ஆனா ஒரு விசயம்...கடன் வேண்டினவங்கதான் இதில மனிதநேயத்துடன் நடக்கவேண்டும். தங்கள் தேவைக்கு இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லி காரியத்தை பெறுவார்கள், அதன் பின்பு சண்டைக்கு நிற்பார்கள். வேண்டினான்தான்....இப்ப அதற்கு என்ன வசதிவரும் போது தரலாம் என்பார்கள். ( எல்லோரும் அப்படியில்ல பாருங்கோ.)

நாம சாப்பிடும் பழத்தை சாப்பிட்டு அறிந்து கொள்ளலாம், புளிப்பா, இனிப்பா, கசப்பா என்று.ஆனா......பாருங்கோ...இப்படியான யோக்கியன் மாதிரி நடக்கும் அயோக்கியவன்களை பழகினாலும் அறியமுடியாது. பொதுவா மனிதரை அறியவே முடியாது..

இப்ப நான் என்ன சொல்ல வாறன் என்றால்.......கடன் வாங்குவதில் இருக்கிற பக்குவம், நேர்மை, விசுவாசமான பேச்சு, எல்லாம் திருப்பி கொடுக்க வேண்டும் என்றதிலும் இருக்கவேண்டும். அப்படித்தவறின் உரியவர்களிடம் உங்கள் கஷ்ட நிலமைகளைச்சொல்லி தவணை கேட்கவேண்டும். இதுவே மனிதநேர்மை.

என்ன பிள்ளைகளே உங்களில் யாருக்காச்சும் இந்த கொடுக்கல் வாங்கல், பிச்சல் புடுங்கல் அநுபவம் இருக்கோ...
அப்ப சரி பிள்ளைகள் நானும் போயிட்டு வாறட்டோ...கனக்க எழுதிப்போட்டன் போலயிருக்கு..

இருக்கிற பொழுது எல்லோருக்கும் நல்லதாக அமையட்டும்.

டாட்டா



நிலம் பார்த்து நாற்று நடு
நல்ல மனம் பார்த்து கடன் கொடு.


--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

" மன அழுத்தம்"

பிள்ளைகள் எல்லோரும் நலம் தானே...
பாட்டியக்கா.. இதற்கு முதல் உங்களுக்கு" பொய் பேசாமை " பற்றி தெரிந்ததை சொல்லியிருந்தேன்.
இன்று " மன அழுத்தம்" பற்றி சொல்லுகிறேன். நன்னா கேட்டுக்குங்கோ...

ஒவ்வொரு உயிருள்ளும் அறிவு தொடங்கிய நாட் முதல் மனஅழுத்தம், மன உளைச்சல் ஏதோ ஒரு வகையில் ஆட் கொண்டுதான் வருகிறது.
குயிலுக்கு தன்னால் ஒரு கூடு கட்டமுடியவில்லையே என்ற கவலை.
மண் குடிசையில் இருப்பவனுக்கு கல் வீடு கட்டமுடியவில்லையே என்ற வருத்தம்.
சிலருக்கு நல்ல வரன் கிடைக்கவில்லை என்ற கவலை.
பலருக்கு தமக்கு வந்த வியாதி பற்றி கவலை.
இப்படி பலவிதங்களில் பலவிதமான கவலைகள் ஒவ்வொரு மனிதருள்ளும் வேரூண்டி வளர்ந்து கொண்டேயிருக்கின்றது.
நாம சதா திரும்பத் திரும்ப இதனையே சிந்திப்பதால் கேடு நமக்குத்தான்.

சரி..இதற்கு என்னதான் பரிகாரம்...

எம்மை ஆட்கொள்ளும் இந்த மன உளைச்சல், எதுவென்று முதலில்அறியவேண்டும்.
அதனை எந்த வகையில் நாம வளரவிடாது, நிவர்த்தி செய்யலாம் என்றதை சிந்திக்கவேண்டும்.

அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.

நல்ல நண்பர்களிடமோ, கணவன், மனைவியிடமோ, அல்லது தாய், தந்தை, சகோதரங்கள் இப்படி யாரிடமாவது எம் மனதை பாதிப்படைந்த விசயத்தை எடுத்துச் சொல்லி ஆறுதலடைய வேண்டும். அவர்கள் தரும் ஆறுதல் வார்த்தைகள் கூட எம் மன உளைச்சலைத் தவிர்க்கும் சக்தி கொண்டது.

ஒரு கப்பலில் துவாரம் ஏற்பட்டுவிட்டால்
உடனே அதனை அடைக்க ஆவன செய்ய வேண்டும்.

அதனை கண்டும் காணாது இருந்தால்....கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் கப்பலினுள் வந்து கப்பலே கடலினுள் மூழ்கி விடுமல்லவா...

"மனதில் கவலையை வளர்க்காதே
வளர்க்கும் கவலையால் மனஅழுத்ததிற்கு ஆளாகாதே".

அப்ப நான் போயிட்டு வாறன்....பிள்ளைகளே..

டாட்டா


--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

"பொய்பேசாமை".

பிள்ளைகள் எல்லோரும் நலம் தானே...
இதற்கு முதல் " சந்தேகம்" பற்றி சொன்னனான் அல்லோ.
இன்றைக்கு பாருங்கோ நான் " பொய் பேசாமை" பற்றி சொல்ல வந்திருக்கிறேன்.

பாருங்கோ பிள்ளையள்...இந்த பொய் யார் யார் கிட்ட சொல்லவேணும், சொல்லக்கூடாது என்று இருக்கு செல்லங்கள்.

நேற்று ஒரு பையன் நம்ம சினேகிதன் மாதிரி என்று சொல்லலாம். ஆள் பார்க்க வாட்டசாட்டமாய் இருந்தான். என்கிட்ட வந்து...பாட்டிம்மா எங்க அம்மா அப்பா பொண்ணு பார்த்திருக்காங்க. நானும் அந்தப்பொண்ணை பார்த்திட்டேன்.
அட்ரா சக்கை . அப்புறம் இப்ப என்ன நெளிவு சுளிவுன்னு கேட்டேன்.

அதற்கு அவன் சொன்னான். பாட்டிம்மா நான் படிக்காதவன். அந்தப்பொண்ணு என்னமோ பிறீ எல்லாம்...அட தம்பி அது டிகிரீ

ம்...அதெல்லாம் முடிச்சுதாம். அந்தப்பொண்ணுக்கு படிச்சமாப்பிள தான் வேணுமாம். நானோ.....அந்தளவிற்கு போகல்ல.. எங்க அம்மா அப்பா பொய் சொல்லி கலியாணத்திற்கு சம்மதம் வேற வாங்கிட்டாங்க. எனக்கு இதில இஷ்டமில்ல. எதற்கு பொய் பேசனும்..?

ஆமா அதுதானே....எதுக்கோ..?

எல்லாம் சீதனம் தான்...

இத வச்சு பாரு்ங்கோ பிள்ளைகள்...எப்பவும் இப்படியான விசயங்களில் பையனும், பொண்ணும் மனசில ஒளிவு மறைவில்லாமல் நேரடியாக பேசனும். திருமண வயசு என்று வந்துவிட்டால்...பெற்றவங்களை மதிச்சாலும், சம்மந்தப்பட்டவங்க முன்னாடியே பொய் பேசாமல் உள்ளத்தில் உள்ளதை தெளிவா பேசிடனும்.

இதுபோக....நமக்கு தேவைப்படும் போது மாத்திரம் பொய் சொல்லலாம் பாருங்கோ. அதுவும் மற்றவங்கள பாதிக்காத வகையில பொய் பேசலாம்.

இதற்கு உதாரணமாக அப்பாவிற்கு உடல் நிலை சரியில்லாத போதும்...பிரயாணம் மேற்கொள்ள வேண்டி வந்தால்..அதற்காக பொய் பேசலாம். இன்னைக்கு போக்குவரத்து ஸ்ரைக் என்று.

அப்புறம் பாருங்கோ.....இன்னுமொரு விசயம். ..சின்ன வயசிலிருந்து அம்மாக்கள் பொய் சொல்லி, சொல்லிதான் சோறு ஊட்டுவாங்க..அதே பொய்யை பிள்ள வளர்ந்த பிறகு சொன்னால் செம அடிதான் கண்டியளோ..

ஆக......நாம சொல்லுகிற பொய்யால எத்தனை பேர் பாதிப்பாங்க என்றதை சிந்திச்சு...கூடிய வரையில உண்மை பேசி பொய்யை தவிர்த்து நடப்பது சாளச்சிறந்தது பிள்ளைகள்.

இருட்ரு பட்டு விட்டது செல்லங்கள். பொடி நடையாய் போயிட்டு வாறன் பிள்ளைகள்.

எல்லோருக்கும் நல்ல பொழுதாக அமையட்டும்.

டாட்டா


பொய்யே பேசமாட்டேன் என்று பொய் பேசாதே..
பேசும் பொய்யால் யாருக்கும் பாதிப்பு உண்டாகாமல் பேசிக்கொள்.

" சந்தேகம்"

வாங்கோ பிள்ளைகளே....எல்லோரும் நலம்தானே...

ஏதோ வயசுபோன காலத்தில என் மூளையில இருக்கிற கொஞ்ச அட்வைசுகளை உங்களுக்கும் சொல்லலாம் என்றுதான் பொடி நடையாய் வந்திருக்கிறேன் கண்டியளோ..

ஏதோ இருக்கிற காலம் வரைக்கும் முடிஞ்சதை எடுத்து எழுதுறன் பாருங்கோ.. ..யாருக்காச்சும் இதில தப்பு துப்பு என்று இருந்தால் பாட்டியை பெருமனதோடு மன்னிச்சு மேட்டரை டப்புன்னு சொல்லிடுங்கோ...சரியோ....பிள்ளைகள்.

இன்றைக்கு " சந்தேகம் " எனறதை பற்றி சொல்லுறன்.

இது பாருங்கோ ஒரு பொல்லாத நோய். தானா வரும், மற்றவர்களின் கோல்மூட்டலாளும் வரும்.
இதனை மனதிற்குள் வச்சுக்கொண்டு சதா அதையே பற்றி யோசிப்பதால எதுவுமே முற்றுப்பெறாது.
நாம உடனே நமக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகத்தை தீர்த்து செயல்பட முன்வரவேண்டும். எடுத்தேன் கவுத்தேன் என்று தடாம், புடாம் என்று மற்றவர்கள் மனதை நோகப்படுத்தி சந்தேகத்தை தீர்ப்பது கூடாது.

யாருடைய மனதும் பாதிக்காத வகையில ஆறுதலாக எடுத்துச்சொல்லி...அன்பாகப்பேசி தீரவிசாரிக்கவேண்டும். நமக்கு ஏற்பட்டிருக்கும் நோயிற்கு வைத்தியரை நாடுவது போல நாமும் சம்மந்தப்பட்டவரையோ., அல்லது வீட்டில இருக்கும் பெரியவர்களையோ மதித்து இதனை பேசி தீர்க்கவேண்டும். நோயை வளர விட்டால் கேடு நமக்குத்தான் பாருங்கோ.

இந்த தீ யை அணைக்காவிட்டால்...என்ன நடக்கும்....ஒரு மூலையில் பிடிச்ச தீ..வீட்டையை அழித்துவிடுமல்லோ..

சரி...சரி...இனி வசதிப்படும்போது வாறன்...வந்து இன்னொரு அட்வைஸ் சொல்லுறன் சரியோ...அதுவரைக்கும்..பாட்டி என்றும் உங்களுடன்.


சந்தேகம் என்பது ஒரு தீ
அதை தீர்க்காவிட்டால் உன் கெதி அதோ கெதி.

சரி பிள்ளைகளே " விடிகின்ற பொழுது எல்லோருக்கும் நல்ல பொழுதாக அமையட்டும் "

அப்ப நான் போயிட்டு வாறன்...தட்டா...எல்லோருக்கும்..