Wednesday, November 12, 2008

" மன அழுத்தம்"

பிள்ளைகள் எல்லோரும் நலம் தானே...
பாட்டியக்கா.. இதற்கு முதல் உங்களுக்கு" பொய் பேசாமை " பற்றி தெரிந்ததை சொல்லியிருந்தேன்.
இன்று " மன அழுத்தம்" பற்றி சொல்லுகிறேன். நன்னா கேட்டுக்குங்கோ...

ஒவ்வொரு உயிருள்ளும் அறிவு தொடங்கிய நாட் முதல் மனஅழுத்தம், மன உளைச்சல் ஏதோ ஒரு வகையில் ஆட் கொண்டுதான் வருகிறது.
குயிலுக்கு தன்னால் ஒரு கூடு கட்டமுடியவில்லையே என்ற கவலை.
மண் குடிசையில் இருப்பவனுக்கு கல் வீடு கட்டமுடியவில்லையே என்ற வருத்தம்.
சிலருக்கு நல்ல வரன் கிடைக்கவில்லை என்ற கவலை.
பலருக்கு தமக்கு வந்த வியாதி பற்றி கவலை.
இப்படி பலவிதங்களில் பலவிதமான கவலைகள் ஒவ்வொரு மனிதருள்ளும் வேரூண்டி வளர்ந்து கொண்டேயிருக்கின்றது.
நாம சதா திரும்பத் திரும்ப இதனையே சிந்திப்பதால் கேடு நமக்குத்தான்.

சரி..இதற்கு என்னதான் பரிகாரம்...

எம்மை ஆட்கொள்ளும் இந்த மன உளைச்சல், எதுவென்று முதலில்அறியவேண்டும்.
அதனை எந்த வகையில் நாம வளரவிடாது, நிவர்த்தி செய்யலாம் என்றதை சிந்திக்கவேண்டும்.

அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.

நல்ல நண்பர்களிடமோ, கணவன், மனைவியிடமோ, அல்லது தாய், தந்தை, சகோதரங்கள் இப்படி யாரிடமாவது எம் மனதை பாதிப்படைந்த விசயத்தை எடுத்துச் சொல்லி ஆறுதலடைய வேண்டும். அவர்கள் தரும் ஆறுதல் வார்த்தைகள் கூட எம் மன உளைச்சலைத் தவிர்க்கும் சக்தி கொண்டது.

ஒரு கப்பலில் துவாரம் ஏற்பட்டுவிட்டால்
உடனே அதனை அடைக்க ஆவன செய்ய வேண்டும்.

அதனை கண்டும் காணாது இருந்தால்....கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் கப்பலினுள் வந்து கப்பலே கடலினுள் மூழ்கி விடுமல்லவா...

"மனதில் கவலையை வளர்க்காதே
வளர்க்கும் கவலையால் மனஅழுத்ததிற்கு ஆளாகாதே".

அப்ப நான் போயிட்டு வாறன்....பிள்ளைகளே..

டாட்டா


--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

No comments: