Wednesday, November 12, 2008

"பொய்பேசாமை".

பிள்ளைகள் எல்லோரும் நலம் தானே...
இதற்கு முதல் " சந்தேகம்" பற்றி சொன்னனான் அல்லோ.
இன்றைக்கு பாருங்கோ நான் " பொய் பேசாமை" பற்றி சொல்ல வந்திருக்கிறேன்.

பாருங்கோ பிள்ளையள்...இந்த பொய் யார் யார் கிட்ட சொல்லவேணும், சொல்லக்கூடாது என்று இருக்கு செல்லங்கள்.

நேற்று ஒரு பையன் நம்ம சினேகிதன் மாதிரி என்று சொல்லலாம். ஆள் பார்க்க வாட்டசாட்டமாய் இருந்தான். என்கிட்ட வந்து...பாட்டிம்மா எங்க அம்மா அப்பா பொண்ணு பார்த்திருக்காங்க. நானும் அந்தப்பொண்ணை பார்த்திட்டேன்.
அட்ரா சக்கை . அப்புறம் இப்ப என்ன நெளிவு சுளிவுன்னு கேட்டேன்.

அதற்கு அவன் சொன்னான். பாட்டிம்மா நான் படிக்காதவன். அந்தப்பொண்ணு என்னமோ பிறீ எல்லாம்...அட தம்பி அது டிகிரீ

ம்...அதெல்லாம் முடிச்சுதாம். அந்தப்பொண்ணுக்கு படிச்சமாப்பிள தான் வேணுமாம். நானோ.....அந்தளவிற்கு போகல்ல.. எங்க அம்மா அப்பா பொய் சொல்லி கலியாணத்திற்கு சம்மதம் வேற வாங்கிட்டாங்க. எனக்கு இதில இஷ்டமில்ல. எதற்கு பொய் பேசனும்..?

ஆமா அதுதானே....எதுக்கோ..?

எல்லாம் சீதனம் தான்...

இத வச்சு பாரு்ங்கோ பிள்ளைகள்...எப்பவும் இப்படியான விசயங்களில் பையனும், பொண்ணும் மனசில ஒளிவு மறைவில்லாமல் நேரடியாக பேசனும். திருமண வயசு என்று வந்துவிட்டால்...பெற்றவங்களை மதிச்சாலும், சம்மந்தப்பட்டவங்க முன்னாடியே பொய் பேசாமல் உள்ளத்தில் உள்ளதை தெளிவா பேசிடனும்.

இதுபோக....நமக்கு தேவைப்படும் போது மாத்திரம் பொய் சொல்லலாம் பாருங்கோ. அதுவும் மற்றவங்கள பாதிக்காத வகையில பொய் பேசலாம்.

இதற்கு உதாரணமாக அப்பாவிற்கு உடல் நிலை சரியில்லாத போதும்...பிரயாணம் மேற்கொள்ள வேண்டி வந்தால்..அதற்காக பொய் பேசலாம். இன்னைக்கு போக்குவரத்து ஸ்ரைக் என்று.

அப்புறம் பாருங்கோ.....இன்னுமொரு விசயம். ..சின்ன வயசிலிருந்து அம்மாக்கள் பொய் சொல்லி, சொல்லிதான் சோறு ஊட்டுவாங்க..அதே பொய்யை பிள்ள வளர்ந்த பிறகு சொன்னால் செம அடிதான் கண்டியளோ..

ஆக......நாம சொல்லுகிற பொய்யால எத்தனை பேர் பாதிப்பாங்க என்றதை சிந்திச்சு...கூடிய வரையில உண்மை பேசி பொய்யை தவிர்த்து நடப்பது சாளச்சிறந்தது பிள்ளைகள்.

இருட்ரு பட்டு விட்டது செல்லங்கள். பொடி நடையாய் போயிட்டு வாறன் பிள்ளைகள்.

எல்லோருக்கும் நல்ல பொழுதாக அமையட்டும்.

டாட்டா


பொய்யே பேசமாட்டேன் என்று பொய் பேசாதே..
பேசும் பொய்யால் யாருக்கும் பாதிப்பு உண்டாகாமல் பேசிக்கொள்.

No comments: